இதுவரை சிமிழை பொறுமையாக படித்தவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. இன்னும் நிறைய பதிவுகள் செய்ய எனக்கு ஆசை தான். ஆனால் நேரம் பற்றாக்குறை, என்னுடைய தட்டச்சு ஆற்றல், பள்ளி வேலைகள், தேர்வுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டமையால் பத்து பதிவுகளுக்கு மேல் என்னால் செய்யமுடியவில்லை. ஆனால் இந்த சிமிழை நான் ஒருபோதும் மூடியே வைத்திருக்க மாட்டேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிங்கையை பற்றிய அறிய தகவல்கள், முக்கியமான பதிவுகள் என்று பதிந்து கொண்டே இருப்பேன். இந்த வலைப்பூவை செய்ய வழிகாட்டிய என்னுடைய பெற்றோர்களுக்கு என் முதல் நன்றி. வலைப்பூ என்றல் என்ன, அதில் எப்படி பதிவு செய்ய வேண்டும் என்று எனக்கு விளக்கி, பயிற்சி கொடுத்த என்னுடைய பள்ளி தமிழ் ஆசிரியருக்கும், உயர் தமிழ் பாடம் படித்து வரும் உமறு புலவர் தமிழ் பள்ளி ஆசிரியர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. சிமிழுக்கான பதிவுகளை நான் சேகரிக்க பயன்படுத்திய வலைபூக்களுக்கும், செய்தி தொகுப்புகளுக்கும், பயன்படுத்திய படங்களுக்கும், நான் மிகவும் நன்றி கடன் பட்டிருக்கிறேன். சிறு பிழைகளோ, தவறுகளோ இருந்தால் என்னை மன்னித்து அந்த பகுதிகளை மேலும் திருத்தமாக செய்ய எனக்கு நீங்கள் அறிவுரை செய்யுங்கள். சிங்கப்பூர் 50 ஆண்டுகளின் நிறைவை மகிழ்ச்சியோடும், பெருமையோடும் கொண்டாடும் இந்த சிங்கை 50 ஆண்டில் இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை ஏற்படுத்திய இணைய மாநாட்டுக்கும் என்னை போன்று பதிவுகள் செய்த மாணவர்கள் சார்பில் என்னுடைய நன்றியை தெரிவித்து தற்காலிகமாக விடைபெறுகிறேன் !
சிங்கப்பூரில் இன்று தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்ததற்கு பெருமளவில் உறுதுணையாய் இருந்தவர் சிங்கப்பூரின் தந்தை திரு லீ குவான் யூ அவர்கள். தமிழர்களை ஆதரித்து அவர்கள் இங்கு குடியேற குடிஉரிமை வழங்கி ஆதரித்தவர். பல வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தமிழர்களின் நிலையை உயர்த்தியவர். அரசாங்கத்திலும் உயர்ந்த பதவிகளை திறமை வாய்ந்த தமிழர்களுக்கு வழங்கியவர். சிங்கப்பூர் அமைய காரணமாக இருந்த தமிழர்களின் தியாகங்களை போற்றி தமிழர்களுக்கு தமிழை ஆட்சி மொழியாக சிங்கையில் அறிவித்த பெருமை அவரையே சாரும். உலக நாடுகளுக்கே முன்மாதி தலைவனாக விளங்கிய திரு லீ குவன் யூ உடலளவில் நம்மை விட்டு பிரிந்தாலும், மனதளவில் என்றும் நீங்க இடத்தில் இருப்பார். திரு லீயின் உணர்ச்சி மிக்க உரையாடல்கள், பேட்டிகள் வருங்கால சமுதாயத்திற்கு அவர் விட்டுச் சென்ற புதையல் ஆகும். இவரை முன்மாதிரியாக பல மாணவர்கள் கொண்டுள்ளனர். திரு லீயின் புகழாரம் இந்தியாவில் பல கிராம மக்களுக்கு தெரிந்திருப்பது ஆச்சர்யமான விஷயம் அல்ல. வேலை தேடி வந்த இந்தியர்களுக்கு வெறுங்கையை அவர் என்றுமே காட்டியதில்லை . தமிழகத்தில் உள்ள பல ஏழை குடும்பங்களின் வறுமை நிலையை அகற்ற அவர்கள் வீட்டில் இருந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி வறுமை நிலையை போக்கியவர். .
ஆசியாவின் இருண்ட மூலையில் இருக்கும் பாவப்பட்ட சந்தை என்று அழைக்கப்பட்ட சிங்கப்பூரை உலகம் வியக்கும் அளவுக்கு போட்டி நாடாகவும், பொருளாதாரத்தில் மிகவும் வளர்ச்சி அடைந்த நாடாகவும், மற்ற நாடுகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும், வர்த்தக மையமாகவும் மாற்றிய பெரும் சக்தி திரு லீ குவான் யூ அவர்கள். சிங்கப்பூர் எதுவும் எல்லை என்ற பெயரிலிருந்து எல்லாமே இங்கு சாத்தியம் என்று மாற்றிய என்றுமே அழியா சிகரம் திரு லீ அனைவரின் நெஞ்சத்திலும் வாழ்வாங்கு வாழுவார்.
திரு லீக்கு நான் செலுத்தும் ஒரு ஆங்கில அஞ்சலி
A tribute to Mr Lee Kuan Yew
You are a Legend, a living Legend
A man of words, wisdom and wits
You were born to give a name to the red dot
Who changed a fishing village to a First World Nation
Making it our HOME
A great man with a great vision
who saw tomorrow with hopes
Restless nights you spent thinking about the nation
You shed your blood and spent your youth for the future generation
You are a Legend a living legend
You were a man of words
Who learned to say NO
Your words were never fake
As you spoke the hard truths
Proverb says “To gain something you have to lose something”
What did you gain – a secured Nation
What did you lose – Your Life
What did we gain – secular state
What did we lose – a strong FORCE
You are a Legend, A living Legend
You left us valuable lessons, touching moments and bold speeches
சிங்கையில் கோயில்களுக்கு பஞ்சம் இல்லை. பொதுவாகவே ஒவ்வொருவட்டாரத்திலும் ஒரு இந்து கோயில், இஸ்லாமிய மசூதி மற்றும் கிறிஸ்தவர்களின் தேவாலயம் காணப்படும். சீக்கியர்களின் ககுருத்வாராவும் ஒரு சில்ல வட்டாரங்களில் இருக்கும்.
சிங்கப்பூரின் முதல் இந்துக் கோயிலான மாரியம்மன் கோயிலில் ஒரு தமிழ்க் கல்வெட்டு உள்ளது. தமிழகத்திலுள்ள கடலூரைச் சார்ந்த சேஷாசலம் பிள்ளை என்பவர் இக்கோயிலிலுள்ள இராமர் திருவடிக்கு 1828 இல் கொடுத்த நன்கொடை பற்றிய குறிப்பு ஒன்று இக்கல்வெட்டில் உள்ளது. இதுவே இங்குள்ள முதல் தமிழ்க் கல்வெட்டாகும்.
முருகன் கோவிலை, சிங்கப்பூர் அரசு தேசிய நினைவுச் சின்னமாக அறிவித்துள்ளது. சிங்கப்பூருக்கு வியாபாரத்திற்க்காக சென்ற தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுகோட்டை செட்டியார்களால் , 1859ல் தண்டாயுதபாணி கோவிலை கட்டப்பட்டது. சிங்கப்பூர் தேசிய பாரம்பரிய நினைவுச் சின்ன வாரியம், இந்த கோவிலை, சிங்கப்பூரின் தேசிய நினைவுச் சின்னங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது. ஏற்கனவே, இரண்டு இந்து கோவில்கள், சிங்கப்பூரின் தேசிய நினைவுச் சின்னங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. சிங்கையின் தேசிய நினைவுச் சின்னங்களின் பட்டியலில், தண்டாயுதபாணி கோவில், 67வது இடத்தில் உள்ளது பெருமைக்குரிய விஷயமாகும். பல இன மக்களிடையே இந்துக்களும் சீனர்களும் ஒன்றாக இணைந்து ஒரே இடத்தில்வழிபடுவது சிங்கப்பூரர்களின் சமய நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் காட்டுகிறது..தூய்மையான பராமரிப்பு, அமைதியான சூழ்நிலை,கனிவான வரவேற்பு சிங்கை கோவில்களின் சிறப்பு அம்சங்களாகும்.
தமிழகத்திலிருந்து வியாபாரத்திற்காக மலாயா வந்த தமிழ் முஸ்லிம்களின் வருகை பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கிவிட்டது. இக்காலகட்டத்தில் தமிழகத்தில் நெசவு தொழில்கள் நலிவுற்றதாலும் , வேறு தொழில்கள் மற்றும் வணிக வாய்ப்புக்கள் அதிகமாக இல்லாததாலும் பிழைப்புதேடி இங்கு வந்தோரின் எண்ணிக்கை பெருகியது. சுலியா மசூதி என்று அழைக்கப்படும் ஜம்மா மசூதி தமிழகத்தின் நாகூர் தர்காவிற்கு நிகராக உள்ள வழிபாட்டு தளமாகும்.
விவசாயிகள், இயற்கை சக்திகளான சூரியன், மழை, பனி மற்றும் கடவுளுக்கும் நன்றி சொல்லும் பண்டிகையான பொங்கல் இந்தியாவில் கொண்டாடுவதைப் போல சிங்கையில் மிகவும் சிறப்பாகவும் பாரம்பரிய வழியிலும் கொண்டாடப்படுகிறது.
திறந்த வெளி அரங்கங்களில் பந்தல் போடப்பட்டு மயிலாட்டம், கரகாட்டம், சிலம்பம், சடுகுடு, கபடி போன்ற கிராமிய விளையாட்டுகள் நடைபெறுகின்றன. பின்னர், பெரிய பானையில் சமத்துவமாக அதாவது இந்தியர்கள், மலாய் காரர்கள், சீனர்கள் ஒன்றாகக் கூடி பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டு பொங்கலை வெகு விமரிசையாக கொண்டாடுகிறார்கள். பொங்கல் பண்டிகையின் போது குட்டி இந்தியாவில் உள்ள சில முக்கியமான தெருக்களில் வண்ண வண்ண பானைகளால் அலங்காரம் செய்கிறார்கள். மாடுப்பபண்ணையிலிருந்து மாடுகள் வரவழைக்கப்பட்டு மாட்டு பொங்கல் சிற்பக கொண்டாடப்படுகிறது.
தினம் தினம் தினம் தீபாவளி - சிங்கையில் தீபத் திருநாள்
சிங்கையில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனிழ் பண்டிகையான தீபாவளி அன்று பொது விடுமுறை ஆகும். தீபத் திருநாளை கொண்டாடும் வகையில் செரங்கூன் சாலை முழுவதும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டிருக்கும். இங்கு வெடிகள் வைக்க தடையானதால், கம்பி மத்தாப்புகள் வகை பட்டாசுகள் விற்கப்படும்.
தீபாவளி கிராமம் அமைக்கப்பட்டு ஒளியூட்டு விழ நடைபெறும். செரங்கூன் சாலை ஒளியூட்டு விழாவை தொடங்கிவைக்க சிறப்பு விருந்தினராக அந்த வட்டார அமைச்சர் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்படுவர்.
தீபாவளி சந்தை, பலகார கடைகள், அணிவகுப்புகள், கண்காட்சிகள் என்று குட்டி இந்திய களை கட்டிக் கொள்ளும். கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
முருகனுக்கு அரோகரா- சிங்கையில் தைபூசம்
தெய்வீகம் தோற்றுப்போகும் அளவுக்கு தமிழகத்தில் கொண்டாடப்படும் தைப்பூசத்தை போல ஏன் அடையும் விட மிகச் சிறப்பாக சிங்கையில் தைபூசம் கொண்டாட்டப்படுகிறது. அலகு காவடி, பால் காவடி என்று பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளை மிகவும் பக்தியோடு முருகனுக்கு செலுத்துகின்றனர். தமிழர்களைக் காட்டிலும் சீனர்களும் போட்டி போட்டுக்கொண்டு காவடி எடுக்கின்றனர். ஆட்டம், பாதடம் என்று தைபூசம் களை கட்டிக் கொண்டு நடைபெறும். கோயிலுக்குச் செல்லும் வழி எல்லாம் தண்ணீர், மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு தண்ணீரும் மோரும் வழங்கபடுகிறது. தைபூசதன்று சிறப்பு காவலர்கள் மற்றும் தொண்டூழியர்கள் கூட்டத்தை கட்டுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பார்கள்.
(இந்த பாட்டின் முடிவில் உமறு புலவர் தமிழ் பள்ளியின் சார்பாக நானும் தோன்றுவேன்:)
உலகில் வேறு எங்கும் காண முடியாத கேட்க முடியாத ஆச்சரியமான தமிழ் மொழி மாத கொண்டாட்டம் என்றால் அது சிங்கையே! மாணவர்களின் தமிழ் மொழி ஆர்வத்தை மேம்படுத்த சிங்கப்பூர் தமிழ் சங்கங்கள் ஏப்ரல் மாதம் முழுவதும் தமிழ் மொழி மாதமாக கொண்டடுகிறது.
உமறு புலவர், தமிழ் முரசு மற்றும் வளர் தமிழ் போன்ற தமிழ் கற்பிக்கும் இயக்கங்கள் பல போட்டிகளை நடத்தி மாணவர்களின் தமிழ் புலமையை மேம்படுத்துகிறது.
பேச்சுத் திறமையை ஊக்கப்படுத்தும் விதமாக சொற்களம், சொற்சிலம்பம், சொற்போர் , தேசிய அளவிலான கதை சொல்லும் போட்டி, திருக்குறள் விழா என்று மாணவர்களின் தமிழ் மொழி திறமைய சிங்கப்பூரில் தமிழ் மொழி மாதம் வெளிச்சம் காட்டுகிறது.
சிங்கை நூலகங்களில் சிறுவர்களுக்கான கதை சொல்லும் நேரம் ஒவ்வொரு மாதமும் நடைபெறும். தமிழில் கதை சொல்லும் நேரத்தில் பிரபலமாக கதை சொல்பவர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து சிறுவர்களின் மேலும் உற்சாகப்படுத்துவர்.
சிங்கையில் உள்ள நூலகங்களில் தமிழ் தொகுப்பில் பன்னிரெண்டாயிரதிற்கும் மேற்பட்ட புத்தகங்களும் 40 வகையான சனிஜிகைகளும் இடம் பெற்றிருக்கின்றன. இத்தொகுப்பில் உள்ள அனைத்து நூல்களும் இலங்கை, மலேசியா, இந்திய ஆகிய நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்டன. சமூகம், கலை, சமையல், மொழி, இலக்கியம், கலாச்சாரம், அறிவியல், நீதி, சட்டம், வரலாறு என அணைத்து தொகுப்புகளிலிருந்தும் அரிய புத்தகங்கள் இருக்கின்றன. பாலர் பள்ளி, தொடக்கப்பள்ளி, உயர்நிலை மாணவர்கள், தொடக்கக் கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், இல்லகியவாதிகள், பொதுமக்கள் என எல்லா பிரிவினருக்கும் அவரவர் வயதிற்கு ஏற்றார் போல புத்தகங்கள் சேகரித்து வைக்கப்பட்டுளன.
சமயத் தொகுப்புகளில் சைவ, வைணவத திருத்தலங்களின் குறிப்புகள் அடங்கிய தொகுப்புகள் உள்ளன. இந்துக் கலாச்சாரம், குலதெய்வங்கள், வழிபடும் முறைகள், ஐம்பெரும் காபியன்கலான சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், குண்டலகேசி, மணிமேகலை, வளையாபதி, இந்திய இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம், சமைய புதகன்கலான பெரியபுராணம், திருவிளையாடர்புராணம், கிறிஸ்தவ, இஸ்லாமிய புத்தகங்களும் இடம்பெற்றிருக்கின்றன.
அக்காலத்திலிருந்து இக்காலம் வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட சங்க இலக்கிய புத்தகங்கள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு , பதினென்கீழ்கணக்கு, பாரதியார், பாரதிதாசன் போன்ற கவிங்ஞயர்களின் தொகுப்புகள், ஆய்வுக்கட்டுரைகள் என்று சகல விதமான புத்தகங்கள் சிங்கை நூலகங்களில் இடம்பெற்றிருக்கின்றன.
சிங்கப்பூர் அரசின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரத்துவ மொழிகளுள் தமிழும் ஓன்று . ஆங்கிலம் , சீனம், மலாய் என்பன பிற அதிகாரத்துவ மொழிகள். ஆங்கிலம் நிர்வாக மொழியாக இருக்கின்றது. தேச முன்னேற்றத்திற்காக எல்லா இனத்தினரும் ஒருவரோடு ஒருவர் இணைந்து, கூடிக்கலந்து, ஒருவர் மற்றொருவரை மதித்துப் பண்புடன் வாழுகின்றனர்.
சிங்கப்பூர் சட்டசபையில் தமிழ் மொழியைப் பயன்படுத்த அனுமதி தரப்பட்டிருக்கின்றது. எல்லா அரசு அறிக்கைகள், மருத்துவமனைகள், சாலைகள், பேருந்து நிலையம், மற்றும் வங்கிகளில் தமிழ் பயன்படுத்தப்படுகின்றது.
வங்கிகளில் ஆண்டு அறிக்கைகளில் தமிழ் மொழி பயன்படுத்தப்படுகிறது. தொடர் வண்டிகளில் எச்சரிக்கைகளும், அறிக்கைகளும் தமிழில் அறிவிக்கப்படுகின்றன. அரசு மருத்துவமனை, வங்கி, அங்காடி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் தமிழர்கள் பணிபுரிகின்றனர். இதுவே தமிழுக்கு சிங்கையில் கிடைத்திருக்கும் வரவேற்பாகும். .
எங்கும் தமிழ்!எதிலும் தமிழ்!
சிங்கை கல்வி வளாகத்தில் திருவள்ளுவர்
உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமையாக நிற்கும்படி செய்ட சிறப்புக்குரியவர் திருவள்ளுவர். சிறந்த சிந்தனையாளர்களின் பட்டியலில் உயர்ந்த இடத்தில இருப்பவர் வள்ளுவர். சிங்கை மாநகரத்தில் MDIS என்ற புகழ் பெற்ற கல்வி வளாகத்தில் நுழைவாயிலில் உள்ள சிற்பங்களில் திருவள்ளுவர் இடம்பெற்றிருக்கிறார். வெவ்வேறு நாட்டிலிருந்து வந்து மாணவர்கள் பயிலும் இந்த கல்வி நிலையித்தில் வள்ளுவர் இ டம் பெற்றிருப்பது, மாணவர்களுக்கு நன்னெறிகளை கற்றுக் கொடுப்பதொடு, நன்மை தீமைகளை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற காரணம் தான்.
MDIS வளாகத்தில் உள்ள சிற்பங்களுள் வள்ளுவர் இடம்பெற காரணமாக இருந்தவர் MDIS நிறுவனத்தின் பொதுச் செயலாளர் திரு தேவேந்திரன் ஆவார். இவருடைய பூர்வீகம் இலங்கை ஆகும். இக்கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்களை மனதளவில் ஊக்கப்படுத்தவும், அவர்கள் வாழ்க்கைக்கு தேவையான ஒழுக்கங்களை பெறுவதற்கும் இந்த தலைசிறந்த மனிதர்களின் உருவச் சிலைகள் உதவும் என்பதற்காக தேவேந்திரன் இந்த சிலைகளை கல்வி நிலையத்தின் வாசலில் நிறுவி உள்ளார்.