சிங்கையில் கோயில்களுக்கு பஞ்சம் இல்லை. பொதுவாகவே ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு இந்து கோயில், இஸ்லாமிய மசூதி மற்றும் கிறிஸ்தவர்களின் தேவாலயம் காணப்படும். சீக்கியர்களின் ககுருத்வாராவும் ஒரு சில்ல வட்டாரங்களில் இருக்கும்.
சிங்கப்பூரின் முதல் இந்துக் கோயிலான மாரியம்மன் கோயிலில் ஒரு தமிழ்க் கல்வெட்டு உள்ளது. தமிழகத்திலுள்ள கடலூரைச் சார்ந்த சேஷாசலம் பிள்ளை என்பவர் இக்கோயிலிலுள்ள இராமர் திருவடிக்கு 1828 இல் கொடுத்த நன்கொடை பற்றிய குறிப்பு ஒன்று இக்கல்வெட்டில் உள்ளது. இதுவே இங்குள்ள முதல் தமிழ்க் கல்வெட்டாகும்.
முருகன் கோவிலை, சிங்கப்பூர் அரசு தேசிய நினைவுச் சின்னமாக அறிவித்துள்ளது. சிங்கப்பூருக்கு வியாபாரத்திற்க்காக சென்ற தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுகோட்டை செட்டியார்களால் , 1859ல் தண்டாயுதபாணி கோவிலை கட்டப்பட்டது.சிங்கப்பூர் தேசிய பாரம்பரிய நினைவுச் சின்ன வாரியம், இந்த கோவிலை, சிங்கப்பூரின் தேசிய நினைவுச் சின்னங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது. ஏற்கனவே, இரண்டு இந்து கோவில்கள், சிங்கப்பூரின் தேசிய நினைவுச் சின்னங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. சிங்கையின் தேசிய நினைவுச் சின்னங்களின் பட்டியலில், தண்டாயுதபாணி கோவில், 67வது இடத்தில் உள்ளது பெருமைக்குரிய விஷயமாகும்.
பல இன மக்களிடையே இந்துக்களும் சீனர்களும் ஒன்றாக இணைந்து ஒரே இடத்தில்வழிபடுவது சிங்கப்பூரர்களின் சமய நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் காட்டுகிறது..தூய்மையான பராமரிப்பு, அமைதியான சூழ்நிலை,கனிவான வரவேற்பு சிங்கை கோவில்களின் சிறப்பு அம்சங்களாகும்.
No comments:
Post a Comment