பாரம்பரியத்தை பறைசாற்றும் பொங்கல் பண்டிகை
விவசாயிகள், இயற்கை சக்திகளான சூரியன், மழை, பனி மற்றும் கடவுளுக்கும் நன்றி சொல்லும் பண்டிகையான பொங்கல் இந்தியாவில் கொண்டாடுவதைப் போல சிங்கையில் மிகவும் சிறப்பாகவும் பாரம்பரிய வழியிலும் கொண்டாடப்படுகிறது.
திறந்த வெளி அரங்கங்களில் பந்தல் போடப்பட்டு மயிலாட்டம், கரகாட்டம், சிலம்பம், சடுகுடு, கபடி போன்ற கிராமிய விளையாட்டுகள் நடைபெறுகின்றன. பின்னர், பெரிய பானையில் சமத்துவமாக அதாவது இந்தியர்கள், மலாய் காரர்கள், சீனர்கள் ஒன்றாகக் கூடி பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டு பொங்கலை வெகு விமரிசையாக கொண்டாடுகிறார்கள். பொங்கல் பண்டிகையின் போது குட்டி இந்தியாவில் உள்ள சில முக்கியமான தெருக்களில் வண்ண வண்ண பானைகளால் அலங்காரம் செய்கிறார்கள். மாடுப்பபண்ணையிலிருந்து மாடுகள் வரவழைக்கப்பட்டு மாட்டு பொங்கல் சிற்பக கொண்டாடப்படுகிறது.
தினம் தினம் தினம் தீபாவளி - சிங்கையில் தீபத் திருநாள்
சிங்கையில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனிழ் பண்டிகையான தீபாவளி அன்று பொது விடுமுறை ஆகும். தீபத் திருநாளை கொண்டாடும் வகையில் செரங்கூன் சாலை முழுவதும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டிருக்கும். இங்கு வெடிகள் வைக்க தடையானதால், கம்பி மத்தாப்புகள் வகை பட்டாசுகள் விற்கப்படும்.
தீபாவளி கிராமம் அமைக்கப்பட்டு ஒளியூட்டு விழ நடைபெறும். செரங்கூன் சாலை ஒளியூட்டு விழாவை தொடங்கிவைக்க சிறப்பு விருந்தினராக அந்த வட்டார அமைச்சர் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்படுவர்.
தீபாவளி சந்தை, பலகார கடைகள், அணிவகுப்புகள், கண்காட்சிகள் என்று குட்டி இந்திய களை கட்டிக் கொள்ளும். கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
முருகனுக்கு அரோகரா- சிங்கையில் தைபூசம்
தெய்வீகம் தோற்றுப்போகும் அளவுக்கு தமிழகத்தில் கொண்டாடப்படும் தைப்பூசத்தை போல ஏன் அடையும் விட மிகச் சிறப்பாக சிங்கையில் தைபூசம் கொண்டாட்டப்படுகிறது. அலகு காவடி, பால் காவடி என்று பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளை மிகவும் பக்தியோடு முருகனுக்கு செலுத்துகின்றனர். தமிழர்களைக் காட்டிலும் சீனர்களும் போட்டி போட்டுக்கொண்டு காவடி எடுக்கின்றனர். ஆட்டம், பாதடம் என்று தைபூசம் களை கட்டிக் கொண்டு நடைபெறும். கோயிலுக்குச் செல்லும் வழி எல்லாம் தண்ணீர், மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு தண்ணீரும் மோரும் வழங்கபடுகிறது. தைபூசதன்று சிறப்பு காவலர்கள் மற்றும் தொண்டூழியர்கள் கூட்டத்தை கட்டுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பார்கள்.
No comments:
Post a Comment