சிங்கப்பூர் அரசின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரத்துவ மொழிகளுள் தமிழும் ஓன்று . ஆங்கிலம் , சீனம், மலாய் என்பன பிற அதிகாரத்துவ மொழிகள். ஆங்கிலம் நிர்வாக மொழியாக இருக்கின்றது. தேச முன்னேற்றத்திற்காக எல்லா இனத்தினரும் ஒருவரோடு ஒருவர் இணைந்து, கூடிக்கலந்து, ஒருவர் மற்றொருவரை மதித்துப் பண்புடன் வாழுகின்றனர்.
வங்கிகளில் ஆண்டு அறிக்கைகளில் தமிழ் மொழி பயன்படுத்தப்படுகிறது. தொடர் வண்டிகளில் எச்சரிக்கைகளும், அறிக்கைகளும் தமிழில் அறிவிக்கப்படுகின்றன. அரசு மருத்துவமனை, வங்கி, அங்காடி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் தமிழர்கள் பணிபுரிகின்றனர். இதுவே தமிழுக்கு சிங்கையில் கிடைத்திருக்கும் வரவேற்பாகும்.
.
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!
சிங்கை கல்வி வளாகத்தில் திருவள்ளுவர்
உலக மக்களின் முன் தமிழர்கள் பெருமையாக நிற்கும்படி செய்ட சிறப்புக்குரியவர் திருவள்ளுவர். சிறந்த சிந்தனையாளர்களின் பட்டியலில் உயர்ந்த இடத்தில இருப்பவர் வள்ளுவர். சிங்கை மாநகரத்தில் MDIS என்ற புகழ் பெற்ற கல்வி வளாகத்தில் நுழைவாயிலில் உள்ள சிற்பங்களில் திருவள்ளுவர் இடம்பெற்றிருக்கிறார்.
வெவ்வேறு நாட்டிலிருந்து வந்து மாணவர்கள் பயிலும் இந்த கல்வி நிலையித்தில் வள்ளுவர் இ டம் பெற்றிருப்பது, மாணவர்களுக்கு நன்னெறிகளை கற்றுக் கொடுப்பதொடு, நன்மை தீமைகளை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற காரணம் தான்.
MDIS வளாகத்தில் உள்ள சிற்பங்களுள் வள்ளுவர் இடம்பெற காரணமாக இருந்தவர் MDIS நிறுவனத்தின் பொதுச் செயலாளர் திரு தேவேந்திரன் ஆவார். இவருடைய பூர்வீகம் இலங்கை ஆகும். இக்கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்களை மனதளவில் ஊக்கப்படுத்தவும், அவர்கள் வாழ்க்கைக்கு தேவையான ஒழுக்கங்களை பெறுவதற்கும் இந்த தலைசிறந்த மனிதர்களின் உருவச் சிலைகள் உதவும் என்பதற்காக தேவேந்திரன் இந்த சிலைகளை கல்வி நிலையத்தின் வாசலில் நிறுவி உள்ளார்.
வாழ்க தமிழ்!
No comments:
Post a Comment