Tuesday, 31 March 2015

தமிழர்களுக்கு தோள் கொடுத்த தேசத் தந்தை




முல்லைக்கு தேர் கொடுத்தவர் பாரி வள்ளல் !
சிங்கைக்கு தோள் கொடுத்தவர் திரு லீ குவான் யூ !





சிங்கப்பூரில் இன்று தமிழர்களின் எண்ணிக்கை  அதிகரித்ததற்கு பெருமளவில் உறுதுணையாய் இருந்தவர் சிங்கப்பூரின் தந்தை திரு லீ குவான் யூ அவர்கள். தமிழர்களை  ஆதரித்து அவர்கள் இங்கு குடியேற குடிஉரிமை வழங்கி ஆதரித்தவர். பல வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தமிழர்களின் நிலையை உயர்த்தியவர். அரசாங்கத்திலும்  உயர்ந்த பதவிகளை திறமை வாய்ந்த தமிழர்களுக்கு வழங்கியவர். சிங்கப்பூர்  அமைய காரணமாக இருந்த தமிழர்களின் தியாகங்களை போற்றி தமிழர்களுக்கு தமிழை ஆட்சி மொழியாக சிங்கையில் அறிவித்த பெருமை அவரையே சாரும். 

உலக நாடுகளுக்கே முன்மாதி தலைவனாக விளங்கிய திரு லீ குவன் யூ உடலளவில் நம்மை விட்டு பிரிந்தாலும், மனதளவில் என்றும் நீங்க இடத்தில் இருப்பார். திரு லீயின் உணர்ச்சி மிக்க உரையாடல்கள், பேட்டிகள் வருங்கால சமுதாயத்திற்கு அவர் விட்டுச்  சென்ற  புதையல் ஆகும். இவரை முன்மாதிரியாக பல மாணவர்கள் கொண்டுள்ளனர். 


திரு லீயின் புகழாரம் இந்தியாவில் பல கிராம மக்களுக்கு தெரிந்திருப்பது ஆச்சர்யமான விஷயம் அல்ல. வேலை தேடி வந்த இந்தியர்களுக்கு வெறுங்கையை அவர் என்றுமே காட்டியதில்லை . தமிழகத்தில் உள்ள பல ஏழை குடும்பங்களின் வறுமை நிலையை அகற்ற அவர்கள் வீட்டில் இருந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி வறுமை நிலையை போக்கியவர். . 



ஆசியாவின் இருண்ட மூலையில் இருக்கும் பாவப்பட்ட சந்தை  என்று அழைக்கப்பட்ட சிங்கப்பூரை உலகம்  வியக்கும் அளவுக்கு போட்டி நாடாகவும், பொருளாதாரத்தில் மிகவும் வளர்ச்சி அடைந்த நாடாகவும், மற்ற நாடுகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும், வர்த்தக மையமாகவும் மாற்றிய பெரும் சக்தி திரு லீ குவான்  யூ அவர்கள். சிங்கப்பூர் எதுவும் எல்லை என்ற பெயரிலிருந்து எல்லாமே இங்கு சாத்தியம் என்று மாற்றிய என்றுமே அழியா சிகரம் திரு லீ அனைவரின் நெஞ்சத்திலும் வாழ்வாங்கு வாழுவார்.


திரு லீக்கு நான் செலுத்தும் ஒரு ஆங்கில அஞ்சலி 


A tribute to Mr Lee Kuan Yew


You are a Legend, a living Legend

A man of words, wisdom and wits

You were born to give a name to the red dot

Who changed a fishing village to a First World Nation

Making it our HOME

A great man with a great vision

who saw tomorrow with hopes

Restless nights you spent thinking about the nation

You shed your blood and spent your youth for the future generation

You are a Legend a living legend


You were a man of words

Who learned to say NO

Your words were never fake

As you spoke the hard truths

Proverb says “To gain something you have to lose something”

What did you gain – a secured Nation

What did you lose – Your Life

What did we gain – secular state

What did we lose – a strong FORCE

You are a Legend, A living Legend


You left us valuable lessons, touching moments and bold speeches

Which we will treasure for our future generations

You are the founding father of Singapore

a chanakya in Politics

You will always live in our heart

We salute you

Mr Lee Kuan Yew

1 comment:

  1. LKY is father of Singapore! சிமிழ் படைப்புகள் தொடரட்டும் ...

    ReplyDelete