அக்கரைச் சீமை அழகினிலே
மனம் ஆட கண்டேனே
புதுமையிலே மயங்குகிறேன்
புதுமையிலே மயங்குகிறேன்
அக்கரைச் சீமை அழகினிலே
மனம் ஆட கண்டேனே
பார்க்க பார்க்க ஆனந்தம்
பறவைப் போல உல்லாசம்
வேலையின்றி யாரும் இல்லை
எங்கும் சந்தோஷம்
வெறும் பேச்சு வெட்டி கூட்டம்
ஏதும் இல்லை இந்த ஊரில்
கள்ளம் கபடம் வஞ்சகம் இன்றி
கண்ணியமாக ஒற்றுமை உணர்வுடன்
வாழும் சிங்கப்பூர்
அக்கரைச் சீமை அழகினிலே
மனம் ஆடக் கண்டேனே
புதுமையிலே மயங்குகிறேன்
சிட்டுப் போல பிள்ளைகள்
தேனில் ஆடும் முல்லைகள்
துள்ளி துள்ளி மான்கள் போல
ஆடும் உற்சாகம்
தினம் தோறும் திருநாளே
சுகம் கோடி மனம் போல
சீனர் தமிழர் மலாய மக்கள்
உறவினர் போல அன்புடன் நட்புடன்
வாழும் சிங்கப்பூர்
அக்கரைச் சீமை அழகினிலே
மனம் ஆடக் கண்டேனே
மஞ்சள் மேனி பாவைகள்
தங்கம் மின்னும் அங்கங்கள்
காவியத்தில் வார்த்தை இல்லை உன்னைப் பாராட்ட
நடை பார்த்து மயில் ஆடும்
மொழி கேட்டு கிளி பேசும்
கண்ணில் தவழும் புன்னகைக் கண்டேன்
சொர்க்கம் போல இன்பமும் பெருமையும்
வாழும் சிங்கப்பூர்
அக்கரைச் சீமை அழகினிலே
மனம் ஆடக் கண்டேனே
புதுமையிலே மயங்குகிறேன்
இதுவரை சிமிழை பொறுமையாக படித்தவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. இன்னும் நிறைய பதிவுகள் செய்ய எனக்கு ஆசை தான். ஆனால் நேரம் பற்றாக்குறை, என்னுடைய தட்டச்சு ஆற்றல், பள்ளி வேலைகள், தேர்வுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டமையால் பத்து பதிவுகளுக்கு மேல் என்னால் செய்யமுடியவில்லை. ஆனால் இந்த சிமிழை நான் ஒருபோதும் மூடியே வைத்திருக்க மாட்டேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிங்கையை பற்றிய அறிய தகவல்கள், முக்கியமான பதிவுகள் என்று பதிந்து கொண்டே இருப்பேன்.
இந்த வலைப்பூவை செய்ய வழிகாட்டிய என்னுடைய பெற்றோர்களுக்கு என் முதல் நன்றி. வலைப்பூ என்றல் என்ன, அதில் எப்படி பதிவு செய்ய வேண்டும் என்று எனக்கு விளக்கி, பயிற்சி கொடுத்த என்னுடைய பள்ளி தமிழ் ஆசிரியருக்கும், உயர் தமிழ் பாடம் படித்து வரும் உமறு புலவர் தமிழ் பள்ளி ஆசிரியர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி.
சிமிழுக்கான பதிவுகளை நான் சேகரிக்க பயன்படுத்திய வலைபூக்களுக்கும், செய்தி தொகுப்புகளுக்கும், பயன்படுத்திய படங்களுக்கும், நான் மிகவும் நன்றி கடன் பட்டிருக்கிறேன். சிறு பிழைகளோ, தவறுகளோ இருந்தால் என்னை மன்னித்து அந்த பகுதிகளை மேலும் திருத்தமாக செய்ய எனக்கு நீங்கள் அறிவுரை செய்யுங்கள்.
சிங்கப்பூர் 50 ஆண்டுகளின் நிறைவை மகிழ்ச்சியோடும், பெருமையோடும் கொண்டாடும் இந்த சிங்கை 50 ஆண்டில் இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை ஏற்படுத்திய இணைய மாநாட்டுக்கும் என்னை போன்று பதிவுகள் செய்த மாணவர்கள் சார்பில் என்னுடைய நன்றியை தெரிவித்து தற்காலிகமாக விடைபெறுகிறேன் !
நன்றி! வணக்கம்!
No comments:
Post a Comment