பதிவு 2. தமிழ் மொழியின் பரிணாம வளர்ச்சி
தமிழ்வழி கல்வி சிங்கப்பூர் நிறுவப்பட்ட காலத்திலேயே தொடங்கப்பட்டது. அனால் அது முறையாக இயங்கத் தொடங்கியது 2ஆம் உலகப் போருக்குப் பின்னர் தான் . இரண்டாம் உலகப்போருக்கு முன்பே தனியார் பள்ளிகளும் மிஷன் தமிழ்ப் பள்ளிகளுமாக மொத்தம் 18 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. சுமார் 1000 மாணவர்கள் பயின்று வந்த மிஷன் மற்றும் தமிழ் பள்ளிகளில் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர ஆரம்பித்தது. இரண்டாம் மொழிக்கான அவசியத்தை இந்தக்காலக் கட்டத்தில்தான் அதாவது 1945க்குப் பின்னர்தான் எல்லோரும் உணர்ந்தனர்.
இரண்டாம் மொழி கற்பதின் அவசியம் இரண்டாம் உலகப் போர் முடிவுற்றதும் உருவாக்கப்பட்டது. புதிய கல்விக் திட்டத்தின் முக்கியக் கூறுகளின்படி ஆங்கிலப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குத் அவர்களுடைய தாய் மொழியை இரண்டாம் மொழியாகப் பாடமாக பயில ஊக்கம் அளிக்கப்பட்டது.
1959ஆம் ஆண்டில் இரண்டாம் மொழி கட்டாயப்பாடமாக்கப்பட்டவுடன் தமிழை மொழி பாடத்தை இரண்டாம் மொழியாகப் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.. தமிழ் அல்லாது பிற தென்னிந்திய மொழிகளைத் தங்கள் தாய் மொழியாகக் கொண்ட மாணவர்களும் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்க ஆர்வம் காட்டினர்.
தமிழ் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் பல ஆங்கிலப் பள்ளிகளில் மேலும் பல தமிழாசிரியர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.
தமிழ் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையும், தமிழ் மொழி கல்வியின் தரமும் வளர்ச்சியடைய ஆங்கில உயர்நிலைப் பள்ளிகளிலும் தமிழ்க்கல்வியைத் தொடர்ந்து மாணவர்கள் கற்றனர்.
தமிழ் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை உயர, 1957ல் மூன்று தமிழ் நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டு சுமார் 150 மாணவர்கள் தமிழ் கற்றனர். அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் பல தமிழ் நிலையங்கள் தொடங்கப்பட்டன. இவ்வாறாக சிங்கப்பூரில் தமிழ் மொழியின் பரிணாம வளர்ச்சி வலுபெற்றது.
No comments:
Post a Comment