Friday, 30 January 2015

நீண்ட இடைவெளிக்கு பிறகு.....






தொடர்ந்து சில நாட்களாக  சிமிழ் மூடி இருந்தமைக்கு மன்னிக்கவும். 

நான் உயர்நிலை இரண்டம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன். பள்ளிப்  பாடம், திட்டப்பணி, போட்டி, தேர்வு, இணைபாட நடிவடிக்கைகள் என தினமும் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை கடிகாரத்தை சுற்றும் முள்ளை போல சுற்றிக்கொண்டே இருக்கிறேன். மிக முக்கியமாக, தமிழ் தட்டச்சு செய்வதில் ஆமையை விட வேகமாக நான் இல்லை. சரியான தமிழ் வார்த்தைகளை இணையத்தின் வழி தேடி, சில சமயங்களில்  அகராதியை புரட்டி தேடி கண்டு பிடிப்பதற்குள் உலகத்தையே ஒரு சுற்று சுற்றி விட்டு வண்டு விடலாம் போல இருக்கிறது.  



 மீண்டும் இந்த வலைப்பூவை எப்படியாவது முடிந்தவரை செய்து முடித்துவிட வேண்டும் என்று எண்ணுகிறேன். பார்போம்..



பதிவுகள் தொடரும்.... 

Saturday, 24 January 2015

சிங்கையில் தமிழ்க் கல்வி காலக்கெடு



பதிவு 2. தமிழ் மொழியின் பரிணாம வளர்ச்சி 


தமிழ்வழி கல்வி சிங்கப்பூர் நிறுவப்பட்ட காலத்திலேயே தொடங்கப்பட்டது. அனால் அது முறையாக இயங்கத் தொடங்கியது 2ஆம் உலகப் போருக்குப் பின்னர் தான் . இரண்டாம் உலகப்போருக்கு முன்பே தனியார் பள்ளிகளும் மிஷன் தமிழ்ப் பள்ளிகளுமாக மொத்தம் 18 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. சுமார் 1000 மாணவர்கள் பயின்று வந்த மிஷன் மற்றும் தமிழ் பள்ளிகளில் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர ஆரம்பித்தது. இரண்டாம் மொழிக்கான அவசியத்தை இந்தக்காலக் கட்டத்தில்தான் அதாவது 1945க்குப் பின்னர்தான் எல்லோரும் உணர்ந்தனர்.

இரண்டாம் மொழி கற்பதின் அவசியம் இரண்டாம் உலகப் போர் முடிவுற்றதும் உருவாக்கப்பட்டது. புதிய கல்விக் திட்டத்தின் முக்கியக் கூறுகளின்படி ஆங்கிலப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குத் அவர்களுடைய தாய் மொழியை இரண்டாம் மொழியாகப் பாடமாக பயில ஊக்கம் அளிக்கப்பட்டது.


1959ஆம் ஆண்டில் இரண்டாம் மொழி கட்டாயப்பாடமாக்கப்பட்டவுடன் தமிழை மொழி பாடத்தை இரண்டாம் மொழியாகப் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.. தமிழ் அல்லாது பிற தென்னிந்திய மொழிகளைத் தங்கள் தாய் மொழியாகக் கொண்ட மாணவர்களும் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்க ஆர்வம் காட்டினர்.


தமிழ் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் பல ஆங்கிலப் பள்ளிகளில் மேலும் பல தமிழாசிரியர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.


தமிழ் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையும், தமிழ் மொழி கல்வியின் தரமும் வளர்ச்சியடைய ஆங்கில உயர்நிலைப் பள்ளிகளிலும் தமிழ்க்கல்வியைத் தொடர்ந்து மாணவர்கள் கற்றனர்.


தமிழ் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை உயர, 1957ல் மூன்று தமிழ் நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டு சுமார் 150 மாணவர்கள் தமிழ் கற்றனர். அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் பல தமிழ் நிலையங்கள் தொடங்கப்பட்டன. இவ்வாறாக சிங்கப்பூரில் தமிழ் மொழியின் பரிணாம வளர்ச்சி வலுபெற்றது.






பதிவுகள் தொடரும்...

Wednesday, 21 January 2015

சிங்கப்பூர் வரலாறு




 பதிவு 1 - வரலாறு அறிந்த உண்மை 


சிவப்புப் புள்ளி சிங்கப்பூர் 


உலக வரைபடத்தில் ஒரு சிறிய சிவப்பு புள்ளி சிங்கப்பூர். மீனவ கிராமமாக இருந்த சிங்கப்பூர்  இன்று வளர்ந்த நாடுகளின் வரிசையில் உச்ச வரிசையில் இடம் பெற்றிருப்பது மிகவும் பெருமைக்குரிய  விஷயம். 704 சதுரக் கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட சிங்கப்பூரின் மக்கள் தொகை சுமார் ஐந்தரை  மில்லியன் ஆகும். சீனர்கள் பெரும் பகுதியாகவும், அடுத்த இடத்தில் மலாய்காரர்களும், சிறுபான்மையாக இந்தியர்களும் இங்கு வசிக்கின்றனர். வங்காளிகள், குஜராத்திகள் மற்றும் தமிழர்கள் குடியேறிய முன்னைய சிங்கப்பூரில் தற்போது, பஞ்சாபியர்கள், மலையாளிகள், மராத்தியர்கள் என்று இந்தியர்களின் மக்கள் தொகை பெருகிக்கொண்டே போகிறது. 

 பெயர்காரணம் 




சிங்கபூர்க்கும் தமிழுக்கும் நீண்டதொரு வரலாறு சார்ந்த தொடர்பு உண்டு. சிங்கைத் தீவில் முதன்  முதலில் குடியேறிய பெருமைக்குரிய வம்சம் சோழ வம்சைதையே சாரும்.  சிங்கப்பூர் என்ற பெயர் சமஸ்க்ருதத்திலிருந்து பிறந்ததாகும். இதற்குச் சான்று சிங்கப்பூரில் கண்டெடுக்கப்பட்ட பழம்பெரும் கல்வெட்டுகளில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பதை கூறலாம். சிங்கப்பூர் என்ற பெயர் சிங்கப்பூரா என்ற மலாய் சொல்லிலிருந்து மருவியதாகவும் கூறப்படுகிறது. மலாய் சொற்களான சிங்கா (சிங்கம்) மற்றும் பூரா (ஊர் ) சேர்ந்து சிங்கப்பூரா என்று அழைக்கப்படுகிறது.


தொல்லியல் ஆராய்ச்சியில் கிடைத்த தமிழ் கல்வெட்டு 



பதிவுகள் தொடரும்...